டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல்

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல்
Published on

சென்னை,

பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் இரங்கல் அறிக்கையில், "தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முத்திரை பதித்த மூத்த நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் நூற்றாண்டின் மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது இழப்பு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே ஒரு பேரிழப்பாகும். "கலைமாமணி" டெல்லி கணேஷ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com