மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் தமிழக அரசு- விஜய் சேதுபதி

கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
‘உலகம் உங்கள் கையில்’ எனும் பெயரில் லேப்டாப் திட்டத்தை நந்தம்பக்கம் வர்த்தக மையத்தில் கல்லூரி மாணவர்களின் வளர்ச்சிக்காக மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள்,நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசு பொறியியல், கலை அறிவியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.
நடிகர் விஜய் சேதுபதியில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ரொம்ப சந்தோஷம் பெருமையும் கூட. இந்த அரசு ரொம்ப காலமாகவே நம்மை படிக்க வைக்க திட்டம் தீட்டுகிறது. அடுத்த தலைமுறைக்கு வேறெதையும் கொடுப்பதை விட கல்வி மிகவும் அவசியம். ஒருவருக்கு கல்வி கிடைப்பதன் மூலம் அவரின் குடும்பம், அடுத்த தலைமுறையினர் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறார்கள். அதற்கு முக்கியமான பங்கை இந்த அரசு மீண்டும் மீண்டும் செய்கிறது. ஒருத்தருடைய வளர்ச்சி என்பது அவருக்கு கிடைக்கும் அறிவின் மூலம் தான். அறிவை வைத்தே அவர்களின் முன்னேற்றம் நிகழ்கிறது. அதற்கு எவ்ளோ தடைகள் வந்தாலும் அதை உடைத்து ஒருவரை முன்னேறி நகர்த்தி செல்வதில் தமிழக அரசு பெரும் பங்குவகிக்கிறது” என்றார்.






