கன்னட படத்தில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை

தமிழ் சீரியல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்த நடிகை பிரியங்கா குமார் கன்னட திரைப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
கன்னட படத்தில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை
Published on

சென்னை,

நடிகை பிரியங்கா குமார் ஏற்கெனவே அதுரி லவ்வர், ருத்ர கருட புராணம் ஆகிய தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது 3வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். எனினும் இம்முறை கன்னடத்தில் அறிமுகமாகிறார்.காற்றுக்கென்ன வேலி தொடரில் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த பிரியங்காவின் புதிய பட வாய்ப்புகளை அவரின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி தொடரில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா குமார். 

தொடரில் நடிகர் சுவாமிநாதன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சீரியல் தொடரில் நடிகை பிரியங்கா குமார் கல்லூரி மாணவியாக நடித்து இருந்தார். இத்தொடரில் பிரியங்கா குமார் - சுவாமிநாதன் இடையேயான காதல் காட்சிகள் பலரால் பாராட்டப்பட்டவை. சமூக வலைதளங்களில் காற்றுக்கென்ன வேலி தொடரின் காதல் காட்சிகளை இளம் தலைமுறை ரசிகர்கள் பலர் பகிர்வது வழக்கம். இதனால் சமூக வலைதளத்திலும் பிரியங்கா குமாருக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் பிரியங்கா, அவ்வபோது தான் வெளியிடும் படங்களின் மூலம் ரசிகர்களிடம் தொடர்ந்து உரையாடி வந்தார்.

தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதை தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். புதிதாக நடிக்கும் தூர தீர யான என்ற கன்னட படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் பிரியங்காவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் விஜய் கிருஷ்ணா நடிக்கவுள்ளார். இப்படத்தை கன்னட திரைப்பட இயக்குநர் மன்சோரே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக பிரியங்கா தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com