தனுஸ்ரீ தத்தா நானா படேகர் மீது கூறிய பாலியல் புகாரில் ஆதாரங்கள் இல்லை -மும்பை போலீஸ்

தனுஸ்ரீ தத்தா நானா படேகர் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டில் ஆதாரங்கள் இல்லை என போலீஸ் தரப்பில் மும்பை கோர்ட்டில் கூறப்பட்டு உள்ளது.
தனுஸ்ரீ தத்தா நானா படேகர் மீது கூறிய பாலியல் புகாரில் ஆதாரங்கள் இல்லை -மும்பை போலீஸ்
Published on

மும்பை

2008ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் பாடல் காட்சியொன்றில் நானா படேகர் அத்துமீறி நுழைந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறிய தனுஸ்ரீ தத்தா, இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆட்கள் என்னை மிரட்டினார்கள். காரில் குடும்பத்தினரோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் கூறினார். அந்த படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவரும் தமிழில் ஜீவாவுடன் ரவுத்திரம் படத்தில் நடித்தவருமான கணேஷ் ஆச்சார்யா எனக்கு நேர்ந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்றும் தனுஸ்ரீ தத்தா கூறினார்.

இதுபோல் டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி சாக்லேட் படப்பிடிப்பில் எனது உடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக நிற்கும்படி கூறினார் என்று அவர் மீதும் தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் கூறினார். 10 வருடங்களுக்கு முன்பு தனுஸ்ரீதத்தா காரை சிலர் கும்பலாக சேர்ந்து தாக்கும் வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி நடிகைகள் சிலர் தனுஸ்ரீக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில் தனுஸ்ரீதத்தா மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். நானா படேகர், கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங், மராட்டிய நவநிர்வான் சேவா கட்சி நிர்வாகிகள் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார்.

தனுஸ்ரீதத்தா நானா படேக்கருக்கு எதிரான வழக்கில் போலீசார் இன்று முதல் கட்ட அறிக்கையை மும்பை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர். அதில் இந்த வழக்கில் நானா படேகருக்கு எதிராக தேவையான சாட்சியங்கள் இல்லை. அதனால் இந்த வழக்கு விசாரணையை தொடரமுடியவில்லை என கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com