"சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்" - பிரபல நடிகை கண்ணீர் மல்க கோரிக்கை

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருக்கிறார்.
சென்னை,
தமிழில் விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை' திரைப்படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சொந்த வீட்டிலேயே தம்மை துன்புறுத்துவதாகவும், தமக்கு யாராவது உதவி செய்யும்படியும் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மன அழுத்தம் காரணமாக தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது வீட்டில் வேலைக்கு ஆட்களைக் கூட நியமிக்க முடியவில்லை என்றும், முன்பு வேலைக்கு வந்தவர்கள் தன் பொருட்களைத் திருடிச் சென்றதாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
Related Tags :
Next Story






