உணவில் விஷம் கலக்க முயற்சி- தனுஸ்ரீ தத்தா பரபரப்பு புகார்


உணவில் விஷம் கலக்க முயற்சி- தனுஸ்ரீ தத்தா  பரபரப்பு புகார்
x

தனுஸ்ரீ தத்தாவின் இந்த புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, விஷாலின் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தார்.

சமீபத்தில் தனது வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கண்ணீருடன் புகார் கூறியிருந்தார். இதற்கிடையே மீண்டும் சில கருத்துகளை கூறி தனுஸ்ரீ தத்தா பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.

அவர் கூறும்போது, ''மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ஒரு படத்தில் பணிபுரிய இருந்தேன். ஆனால் அது முழுமையடையவில்லை. சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கும், தான் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது.

இதேபோல் நடிகை பூஜா மிஷ்ராவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் என்னைச் சுற்றி விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுகிறது. நான் உண்ணும் உணவிலும் விஷம் கலக்க முயற்சிகள் நடந்துள்ளது. கடவுளின் அருளால் அதில் இருந்து தப்பித்து விட்டேன்'' என்றார். தனுஸ்ரீ தத்தாவின் இந்த புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

1 More update

Next Story