தான்யா நடித்த "றெக்கை முளைத்தேன்" படத்தின் ஆடியோ வெளியீடு

தான்யா நடித்த ‘றெக்கை முளைத்தேன்’ படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Published on

சென்னை,

சுந்தரபாண்டியன், சத்ரியன், கொம்பு வெச்ச சிங்கம்டா ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர் தனது பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் றெக்கை முளைத்தேன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக  தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.

மேலும், ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஜீவா ரவி, மீரா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்கிறார். தீசன் இசை அமைத்துள்ளார்.

கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில் 'றெக்கை முளைத்தேன்' படத்தின் ஆடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com