ஒரே வாரத்தில் ரூ.11 கோடி சம்பாதித்த நடிகை...எப்படி தெரியுமா?

ஹாலிவுட் திரை உலகில் 2000-ம் ஆண்டுல் பிரபல கவர்ச்சி நடிகையாக ஷானன் எலிசபெத் இருந்துள்ளார்.
ஒரே வாரத்தில் ரூ.11 கோடி சம்பாதித்த நடிகை...எப்படி தெரியுமா?
Published on

அமெரிக்கன் பை படத்தில் நடித்த ஷானன் எலிசபெத் ஒன்லி பேன்ஸ் கணக்கை தொடங்கி உள்ளார். தமிழ் திரை உலக பிரபலங்களான தர்ஷா குப்தா, அபிராமி வெங்கடாசலம் உள்பட பலர் சமீபத்தில் சந்தா சேவையை தொடங்கி வருமானத்தை பெருக்கி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 16-ம் தேதி தனது கணக்கை தொடங்கிய ஷானன் எலிசபெத் ஒரு வாரத்தில் ரூ.11 கோடி வருமானத்தை பெற்றுள்ளார். ஹாலிவுட் திரை உலகில் 2000-ம் ஆண்டுல் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்த ஷானன் எலிசபெத் கூறும்போது, ஹாலிவுட் படங்களின் கட்டுப்பாடு என்னை சலிப்படைய செய்துள்ளது.

ஒன்லி பேன்ஸ் தளம் இதுவரை பார்த்திராத ஒரு கவர்ச்சியாக பக்கத்தை வெளிப்படுத்தவும், ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கவும் உதவுகிறது. என் விருப்பப்படி கருத்துக்களை உருவாக்கவும், சுதந்திரமாகவும் இருக்கவும் அனுமதிக்கிறது. இதுவே என் எதிர்காலம் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com