நடிகர்கள் அமலா பால் மற்றும் பஹத் பாசில் ஆகியோருக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்கு முடித்து வைப்பு

நடிகர்கள் அமலா பால் -பஹத் பாசில் ஆகியோருக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன.
நடிகர்கள் அமலா பால் மற்றும் பஹத் பாசில் ஆகியோருக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்கு முடித்து வைப்பு
Published on

திருவனந்தபுரம்,

நடிகர்கள் அமலா பால் மற்றும் பஹத் பாசில் ஆகியோருக்கு எதிராக வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட குற்றப்பிரிவு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பான அறிக்கை சமீபத்தில் திருவனந்தபுரம் தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பிரிவு தகவல் படி, இரு நடிகர்களும் தங்கள் வாகனங்களை மாநிலத்திற்கு வெளியில் இருந்து வாங்கியிருந்தனர். மேலும், அவர்கள் வேறு இடங்களில் பதிவு செய்வதன் மூலம் மாநில கருவூலத்திற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என கூறப்பட்டு உள்ளது.

அமலாபால் பெங்களூருவில் வாகனத்தை வாங்கி இருந்தார். பாசில் தனது வாகனத்தை பெங்களூரு மற்றும் டெல்லியில் இருந்து வாங்கியிருந்தார். தவிர, பாசில் வாகனங்களின் பதிவை கேரளாவுக்கு மாற்றி, சர்ச்சை வெடித்த உடனேயே வரி செலுத்தியிருந்தார்

எவ்வாறாயினும் அமலாபால் தனது வாகனத்தை ஒரு போலி முகவரியில் பதிவு செய்ததாக புதுச்சேரியில் உள்ள அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவித்துள்ளோம். அவர்கள் அது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இதேபோன்ற வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளில் நடிகராக மாறிய அரசியல்வாதி சுரேஷ் கோபிக்கு எதிரான குற்றப்பிரிவு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்ற இருவரையும் போலல்லாமல், அவர் இந்த வாகனத்தை கேரளாவில் வாங்கியிருந்தார், தற்போது வரை, அவர் வரி ஏய்ப்பு செய்வதற்காக ஒரு தவறான முகவரியில் புதுச்சேரியில் பதிவு செய்திருந்தார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.

வரி விதிப்பை தவிர்ப்பதற்காக புதுச்சேரியில் தங்கள் வாகனங்களை பதிவு செய்த 380 வாகன உரிமையாளர்களுக்கு எதிராக விசாரணை பல்வேறு கட்டங்களில் உள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மையில், புதுச்சேரி போக்குவரத்து துறைக்கு கடிதம் அனுப்பிய கேரளா மாநில போலீசார், அமலாபால் சொகுசு கார் பதிவு செய்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் எழுதியிருந்தனர்.

அதன்படி புதுச்சேரி சட்டத்துறை வல்லுனர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள புதுச்சேரி போக்குவரத்து துறை, இதுகுறித்து ஆலோசனை கேட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com