விஜய்குமார் நடிக்கும் "அறிவு" படத்தின் டீசர் அறிவிப்பு

பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பெண்களின் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
விஜய்குமார் நடிக்கும் "அறிவு" படத்தின் டீசர் அறிவிப்பு
Published on: 

சென்னை,

‘அறிவு’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, படத்தின் டீசர் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் உரிமைகளைப் பேசும் புதிய படம்

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய் குமார் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘அறிவு’. இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். மோட்டிவ்ட்ரோன் புரொடக்ஷன் சார்பில் சாய் வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படம், பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பெண்களின் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

நிறைவடைந்த படப்பிடிப்பு

மூணாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ளது. மலைக் கிராமங்களில் கல்வியைக் கொண்டு செல்லும் நாயகனை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. சமூகப் பிரச்சினைகளையும் பெண்களின் உரிமைகளையும் பேசும் படமாக ‘அறிவு’ உருவாகியுள்ளதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாளை வெளியாகும் டீசர்

‘அறிவு’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, படத்தின் டீசர் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு விஜய் குமாரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com