துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ பட டீசர் வெளியீடு!

துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ பட டீசர் வெளியீடு!
Published on: 

சென்னை,

துல்கர் சல்மானின் புதிய தோற்றம் மற்றும் படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த டீசர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், தனது வித்தியாசமான கதைத்தேர்வுகள் மற்றும் நடிப்பால் தென்னிந்திய ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது திறமையால் திரையுலகில் வளர்ந்துள்ள இவர் நடிப்பில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

‘வாயை மூடி பேசவும்’, ‘ஓகே கண்மணி’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்ற துல்கர் சல்மான், தற்போது ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற புதிய தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகையாக அறிமுகமாகும் சாத்விகா வீரவல்லி

பவன் சடிநேனி இயக்கும் இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சாத்விகா வீரவல்லி நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் கதாநாயகியாகத் திரையுலகில் அறிமுகமாகிறார். சமீபத்தில், சாத்விகாவின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வீடியோவைப் படக்குழு வெளியிட்டிருந்தது.

கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமாஸ் மற்றும் லைட் பாக்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

நவம்பர் 20-ல் வெளியாகும் படம்

‘ஆகாசம்லோ ஒக தாரா’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மானின் புதிய தோற்றம் மற்றும் படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த டீசர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com