"ஹவுஸ் ஆப் தி டிராகன்" 3வது சீசனின் டீசர் வெளியானது

இந்த புதிய சீசன் வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியாக உள்ளது.
"ஹவுஸ் ஆப் தி டிராகன்" 3வது சீசனின் டீசர் வெளியானது
Published on

உலகப்புகழ் பெற்ற "கேம் ஆப் த்ரோன்ஸ்" தொடரின் முன்கதையாக உருவான "ஹவுஸ் ஆப் தி டிராகன்" 3வது சீசனின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

இந்த புதிய சீசன் வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 எபிசோட்கள் கொண்ட இந்த சீசன், வாராவாரம் ஒரு எபிசோட் என்ற அடிப்படையில் ஒளிபரப்பப்படும். ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை இந்த தொடரின் ஒளிபரப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த தொடரானது எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்.ஆர். மார்டின் எழுதிய (ப்யர் அண்ட் பிளட்) Fire & Blood நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டார்கேரியன் குடும்பத்தின் அரசியல் மோதல்கள் மற்றும் ஆட்சிப் போட்டிகளை மையமாகக் கொண்ட இந்த சீசன், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com