ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆரின் 'வார் 2' பட டீசர் எப்போது?


Teaser for Hrithik, NTR’s War 2 to be out on this special date
x

இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.

மும்பை,

பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் 'வார்'. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஹிருத்திக் ரோஷனுடன் டைகர் ஷ்ராப் மற்றும் வாணி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

அதனையடுத்து, யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் 'வார் 2' படத்தை தயாரித்து வருகிறது. இந்தப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மீண்டும் மேஜர் கபீர் தலிவாலாக நடிக்கிறார். இந்த படத்தை 'பிரம்மாஸ்திரா' பட இயக்குனர் அயன் முகர்ஜி இயக்குகிறார். ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 'வார் 2' பட டீசர் வருகிற 20-ம் தேதி ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story