'இரண்டாம் குத்து' திரைப்படத்தின் டீசர்: சமூகவலை தளங்களில் இருந்து நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

'இரண்டாம் குத்து' திரைப்படத்தின் டீசரை சமூகவலை தளங்களில் இருந்து நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
'இரண்டாம் குத்து' திரைப்படத்தின் டீசர்: சமூகவலை தளங்களில் இருந்து நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Published on

மதுரை,

'இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் 2-ம் பாகமாக உருவாகியுள்ள படம் இரண்டாம் குத்து. இத்திரைப்படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ளார். இதன் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூகவலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பின.

இதனைத்தொடர்ந்து அந்த திரைப்படத்தை வெளியிட நிரந்தரத் தடை கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அனைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து இரண்டாம் குத்து படத்தின் டீசரை நீக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் டீசரின் வசனங்கள், காட்சிகள் எல்லாம் ஆபாசமானதாக இருப்பதாகவும் இது போன்ற டீசர்கள் வருவது நல்லதல்ல என்றும் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக உள்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, தணிக்கை குழு மற்றும் படத்தின் இயக்குநருக்கு விளக்கம் தர உத்தரவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com