சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு "கருப்பு" படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் சூர்யா இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சென்னை,
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ''கருப்பு'' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா இன்று (ஜூலை 23-ம் தேதி) தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவரது பிறந்த நாளை முன்னிட்டு கருப்பு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story






