பிரீத்தி முகுந்தனின் முதல் மலையாள படம் - டீசர் வைரல்


Teaser of MainePyarKiya is out now
x
தினத்தந்தி 5 Aug 2025 8:30 PM IST (Updated: 20 Aug 2025 1:05 PM IST)
t-max-icont-min-icon

இப்படம் வருகிற ஆகஸ்ட் 29 -ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகை பிரீத்தி முகுந்தன் 'மைனே பியார் கியா' என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'ஓம் பீம் புஷ்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரீத்தி முகுந்தன். அதனைத்தொடர்ந்து, கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

இவர் தற்போது மலையாள சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில், கதாநாயகனாக சமீபத்தில் வெளியான திரில்லர் படமான 'முரா' படத்தில் நடித்திருந்த ஹிருது ஹாரூண் நடித்திருக்கிறார். பைசல் பாசிலுதீன் இயக்கி உள்ள இப்படத்தில், அனார்கலி மரிக்கார் மற்றும் அல்தாப் சலீம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 29 -ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story