ஆனந்தி நடித்த ’பிரேமண்டே’...டீசர் வெளியீடு

இந்தப் படம் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
நடிகை ஆனந்தி 'பிரேமண்டே' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் நவநீத ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமாகிறார். தெலுங்கு ஹீரோ பிரியதர்ஷி புலிகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார். காதல் மற்றும் நகைச்சுவை பொழுதுபோக்கு படமாக இருக்கும் இதனை ஜான்வி நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. டீசரை பார்க்கும்போது, இந்தப் படம் திருமணம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுபோல் தெரிகிறது.
இந்தப் படம் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
Related Tags :
Next Story






