அர்ஜுன் இயக்கும் 'சீதா பயணம்' பட டீசர் வெளியீடு


Teaser of SeethaPayanam is out now
x

இப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.

சென்னை,

அர்ஜுன் இயக்கும் 'சீதா பயணம்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

அர்ஜுன், நிரஞ்சன் , ஐஸ்வர்யா , சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், ''சீதா பயணம்'' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

அர்ஜுன் 1992-ல் வெளியான 'சேவகன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'ஜெய் ஹிந்த்', 'தாயின் மணிக்கொடி', 'வேதம்', 'ஏழுமலை' உள்ளிட்ட 12 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து 'சொல்லிவிடவா' படத்தை இயக்கியிருந்தார்.

1 More update

Next Story