இந்த தேதியில் வெளியாகிறது 'விடி12' படத்தின் டைட்டில் டீசர்


Teaser of Vijay Deverakonda’s to be out on THIS date
x

விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கடைசியாக 'பேமிலி ஸ்டார்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'விடி12' எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கவுதம் தின்னனுரி இயக்குகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.

தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் குறித்த முக்கிய அறிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் 12-ம் தேதி 'விடி12' படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

1 More update

Next Story