நானி நடிக்கும் 'ஹாய் நான்னா' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

நானி நடிக்கும் 'ஹாய் நான்னா' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
நானி நடிக்கும் 'ஹாய் நான்னா' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on: 

இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'ஹாய் நான்னா' படத்தின் டீசர் வருகிற 15-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது.

'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com