அண்ணாமலை நடித்த "அரபி" திரைப்படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு...!

அண்ணாமலை நடித்த “அரபி” திரைப்படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை நடித்த "அரபி" திரைப்படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு...!
Published on

சென்னை,

சென்னை, வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வெற்றிப் பெற்றுள்ளது. அந்த வகையில் கன்னட மொழியில் உருவாகி வரும் படம் 'அரபி'. இப்படம் தன்னுடைய இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும் விடாமுயற்சியினால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் ராஜ்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தை ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, விஸ்வாஷின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்திற்காக இயக்குனர் ராஜ்குமார், அண்ணாமலையை அனுகியபோது படத்தின் கதை கேட்டு பிடித்து போன அண்ணாமலை இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, சம்பளமாக ரூ.1 பெற்றுக் கொண்டு நடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 'அரபி' படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த அரபி படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com