'அக்யூஸ்ட்' படத்தின் டீசர் வெளியீடு


அக்யூஸ்ட் படத்தின் டீசர் வெளியீடு
x

'அக்யூஸ்ட்' படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

கன்னட இயக்குனரான பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள படம் 'அக்யூஸ்ட்'. இந்த படத்தில் 'திருநெல்வேலி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் உதயா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் அஜ்மல், யோகி பாபு, பிரபு சாலமன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை மருதநாயகம், இசையை நரேன் பாலகுமார் மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

1 More update

Next Story