ருத்ரா, பிரீத்தி அஸ்ராணி நடித்த ‘எல்லோ எல்லோ டிரிட்டீ பெல்லோ’ படத்தின் டீசர் வெளியீடு

இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ருத்ரா, பிரீத்தி அஸ்ராணி நடித்த ‘எல்லோ எல்லோ டிரிட்டீ பெல்லோ’ படத்தின் டீசர் வெளியீடு
Published on

சென்னை,

'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரரான ருத்ரா தற்போது ‘எல்லோ எல்லோ டிரிட்டீ பெல்லோ’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை பிரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார்.

விக்கி பாஸ்கர் எழுதி, இயக்கிய இந்த படத்தை விஷ்ணு விஷால், சஞ்சய் அர்ஜுன்தாஸ் வத்வா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சர்களை அடிப்படையாக கொண்டு, உருவாக்கப்பட்டுள்ளது.

லவ் பேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com