அந்தோணி இயக்கி நடித்த 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' படத்தின் டீசர் வெளியீடு

இந்த டீசர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.

அந்தோணி இயக்கி நடித்த 'ஏன் என்னை ஏதோ செய்தாய்'  படத்தின் டீசர் வெளியீடு
Published on

சென்னை,

அறிமுக இயக்குநர் டி. அந்தோணி இயக்கி, நடித்த 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.

அறிமுக இயக்குநராக டி. அந்தோணி

அறிமுக இயக்குநர் டி. அந்தோணி இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மனதை வருடும் காதல் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நட்சத்திர பட்டாளம்

இந்தப் படத்தில் டி. அந்தோணியுடன், மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான 'தேடல் தொடருதே..' லிரிக்கல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

காதலுக்கு முக்கியத்துவம்

இன்டென்ஸ் ரொமான்டிக் மற்றும் உணர்வுபூர்வமான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' திரைப்படம், இளைஞர்கள் மற்றும் காதல் திரைப்பட ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தின் புதிய டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com