

சென்னை,
இந்த வெப் தொடரின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, டீசர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள ‘அக்கா’ வெப் தொடர் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் தொடரை ஒய்ஆர்எப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இத்தொடரை எழுதி இயக்கியுள்ளார்.
இந்தத் தொடரில் தன்வி ஆஸ்மி, அன்ஷுமான் புஷ்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியானது. இதன் முதல் தோற்றப் போஸ்டர் 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.
1980-களில் தென்னிந்தியாவில் உள்ள பெர்னூர் என்ற கற்பனையான நகரத்தை மையமாகக் கொண்டு இத்தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பெண்கள் குழுவைச் சுற்றி கதை நகர்கிறது. அவர்களின் அதிகாரத்துக்கு வெளியிலிருந்து வரும் ஒருவரால் அச்சுறுத்தல் ஏற்படுவதும், அதனால் உருவாகும் மோதல்களும் திரில்லர் பாணியில் சொல்லப்படுகின்றன.
நீண்டகாலமாகத் தயாரிப்பில் இருந்து வந்த ‘அக்கா’ வெப் தொடர், வரும் அக்டோபர் 30-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்தத் தொடரின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வெப் தொடரின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, டீசர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.