'தி ராஜா சாப்' படத்தின் டீசர் அப்டேட்

'தி ராஜா சாப்' படத்தின் டீசர் அப்டேட்

பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Published on

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவந்த பிரபாஸ், 'பாகுபலி' படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். சமீபத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி ரூ.1,110 கோடிக்கும் மேல் கடந்து வசூல் செய்து சாதனை படைத்த 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படத்தை அடுத்து, மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்தநிலையில், இப்படத்தின் டீசர் குறித்ம அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.அதன்படி 'தி ராஜா சாப்' படத்தின் டீசர் வருகின்ற டிசம்பர் மாதம் 25-ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையில் ஸ்பெஷலாக வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக நடிகர் பிரபாஸ் "ஸ்பிரிட், சலார் 2" ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com