மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் `டிரெயின்' படத்தின் டீசர் அப்டேட்

ரெயிலில் நிகழும் சம்பவத்தின் பின்னணியில் ‘டிரெயின்’ படம் உருவாகியுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் `டிரெயின்' படத்தின் டீசர் அப்டேட்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'டிரெயின்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை சுருதி ஹாசன் மற்றும் நடிகர் நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷ்ன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்திருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

ஒரே இரவில் ரெயிலில் நடக்கும் த்ரில்...

'டிரெயின்' திரைப்படம், ஒரே இரவில் ரெயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டார்க் திரில்லர் படமாகும். விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகை சுருதி ஹாசன் ஒரு பாடலை பாடியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டீசர் அப்டேட்

இந்த நிலையில், 'டிரெயின்' திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, படத்தின் டீசரும், இசையும் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com