நடுரோட்டில் காதலியை அடித்த வாலிபர்...! தட்டிக் கேட்ட இளம் ஹீரோ

ஐதராபாத்தில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் தன் காதலியை அடித்த நபரை கண்டித்த நடிகர்
நடுரோட்டில் காதலியை அடித்த வாலிபர்...! தட்டிக் கேட்ட இளம் ஹீரோ
Published on

ஐதராபாத்

பலனா அப்பாயி பலனா அம்மாயி என்ற தெலுங்கு படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் தெலுங்கு நடிகர் நாக சவுர்யா. இந்நிலையில் அவர் ரீல் ஹீரோ மட்டும் அல்ல நிஜத்திலும் ஹீரோ என ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர் செய்த விஷயம் ஒன்று வைரலாகி உள்ளது.

ஐதராபாத்தின் பிசியான சாலை ஒன்றில் வாலிபர் ஒருவர் இளம் பெண்ணை அடித்து உள்ளார். இதை பார்த்த நாக சவுர்யா ஓடி வந்து அதை தடுத்தார். மேலும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்குமாறு வாலிபரிடம் கூறினார். ஆனால் அந்த வாலிபரோ கோபப்பட்டு, அவள் என் காதலி என்று கூறி மன்னிப்பு கேட்க மறுத்தார்.

காதலியாக இருந்தாலும் அடிப்பது தவறு என்றார். மேலும் அந்த வாலிபரின் கையை பிடித்து தடுத்து நிறுத்தி மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார் நாக சவுர்யா. இதை பார்த்த அந்த பெண் தன் காதலரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது.

யார் யாரை அடித்தால் நமக்கென்னவென்று செல்லாமல் சாலையில் இறங்கி அந்த வாலிபரை கண்டித்த நாக சவுர்யா நிஜ ஹீரோ என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

படம் ரிலீஸாவதால் விளம்பரம் தேடி தான் நாக சவுர்யா இப்படி செய்திருக்கிறாரோ என்றும் சிலர் பேசுகிறார்கள்.

நாக சவுர்யாவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி திருமணம் நடந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரான அனுஷா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com