

சென்னை,
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இப்படம் காதலை மையமாகக் கொண்டு, கமர்ஷியல் அம்சங்களுடன் தயாராகிறது.
அறிமுக இயக்குனர் கார்த்திக் ஜெய் பழனி இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு நடிகர் ராம் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கில் ‘மேட்’, மேட் ஸ்கொயர் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான ராம் நிதின், இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் பிரார்த்தனா நாதன், தேஜு அஸ்வினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ‘பார்க்கிங்’ திரைப்படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனத்தின் கே.எஸ்.சினிஷ், ரெடாக்டட் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இப்படம் காதலை மையமாகக் கொண்டு, கமர்ஷியல் அம்சங்களுடன் தயாராகிறது. படத்தின் தலைப்பு மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.தெலுங்கு திரையுலகில் கவனம் பெற்ற ராம் நிதின், தமிழில் அறிமுகமாகும் இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இளம் தலைமுறை ரசிகர்களைக் கவரும் வகையில் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. தெலுங்கில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த ராம் நிதின், தமிழில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு தொடர்பான அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.