திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த பிரபல தெலுங்கு நடிகை

இது தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.
திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த பிரபல தெலுங்கு நடிகை
Published on

திருச்செந்தூர்,

பிரபல தெலுங்கு நடிகை கோமலி பிரசாத். இவர் 'நெப்போலியன்', 'ரவுடி பாய்ஸ்', 'செபாஸ்டியன் பிசி 524', 'ஹிட் செகண்ட் கேஸ்', 'ஹிட் 3', 'சஷிவதானே சித்தலு' போன்ற தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தற்போது, 'மண்டவெட்டி மூலம் தமிழ்த் திரையுலகில் தனது திறமையை நிரூபிக்கத் தயாராகி உள்ளார். சரண்ராஜ் இயக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது.

Also Read
150 கிமீ வேகத்தில் கார்… இன்ஸ்டாகிராம் லைவில் நடந்த விபத்து: பிரபல யூடியூபர் கவலைக்கிடம்
திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த பிரபல தெலுங்கு நடிகை

இந்நிலையில், நடிகை கோமலி பிரசாத் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com