ரஜினிகாந்தின் ’தர்மன்’ படத்தில் இணைந்த தெலுங்கு நட்சத்திரம் - வைரலாகும் அறிமுக வீடியோ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
ராம் பொதினேனி
Published on: 

சென்னை,

கமல்ஹாசன் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி இணைந்துள்ளார்.

தர்மன்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார். 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வரும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

பொங்கல் பண்டிகை

சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு , நயன்தாரா மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராம் பொதினேனி

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி இணைந்துள்ளார். அறிமுக வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு இதனை அறிவித்துள்ளது.

X