'காதல், அசைக்க முடியாத நம்பிக்கையின் கதைதான் டெஸ்ட் '- நயன்தாரா


Test is a story of love and unwavering faith - Nayanthara
x

இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

சென்னை,

தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா' உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். 'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், நயன்தாரா , மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான் 'டெஸ்ட்' திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நயன்தாராவின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி உள்ளது. நயன்தாரா இப்படத்தில் குமுதா என்ற ஆசிரியராக நடித்துள்ளார். இப்படம் குறித்து நயன்தாரா பேசுகையில், 'காதல், அசைக்க முடியாத நம்பிக்கையின் கதைதான் டெஸ்ட் . அதை நெட்பிளிக்ஸில் மக்கள் பார்ப்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்' என்றார்.

1 More update

Next Story