“தாய் கிழவி” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தாய் கிழவி” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Published on

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்துள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’ நேற்று வெளியானது. இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது.இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், 'தாய் கிழவி' படம் நேற்று வெளியான முதல் நாளே ரூ.3 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பட்ஜெட் பத்து கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படும் நிலையில், முதல் நாளே ரூ.3 கோடி குவித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com