'தலைவன் தலைவி' படத்தின் தெலுங்கு டைட்டில் டீசர் வெளியீடு

தலைவன் தலைவி படம் வருகிற 25ந் தேதி வெளியாக உள்ளது.
'தலைவன் தலைவி' படத்தின் தெலுங்கு டைட்டில் டீசர் வெளியீடு
Published on

சென்னை,

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் புதிதாக  படம் உருவாகி உள்ள படம் 'தலைவன் தலைவி'. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக நடித்துள்ளார். தலைவன் தலைவி என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படம் வருகிற 25ந் தேதி வெளியாக உள்ளது'

இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தெலுங்கில் "சார் மேடம்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com