இந்தியில் ரீமேக்காகும் “தலைவர் தம்பி தலைமையில்”


இந்தியில் ரீமேக்காகும் “தலைவர் தம்பி தலைமையில்”
x

ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் கடந்த 15ம் தேதி வெளியானது. இதில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை மலையாள இயக்குநர் நிதேஷ் சஹாதேவ் இயக்கியிருந்தார். அரசியல் கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் 9 நாட்களில் உலகளவில் ரூ.25 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் இடம்பெற்ற ‘படிச்சு படிச்சு சொன்னனேடா, கண்டிஷன்ஸ பாலோ பண்ணுங்கடா பண்ணுங்கடான்னு... கேட்டீங்களா’ வசனம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் அதே சமயம் விமர்சனத்தையும் எதிர்கொண்டது.

இந்த நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தெரிவித்துள்ளார். பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே இதன் இந்தி ரீமேக் உரிமம் பெறப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story