'தலைவரு நிரந்தரம்' - ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!

ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.
'தலைவரு நிரந்தரம்' - ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!
Published on

சென்னை,

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஹுக்கும் - தலைவர் அலப்பறை' என்ற பாடல் இன்று (ஜூலை 17) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சூப்பர் சுப்பு எழுதியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'ஜெயிலர்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com