விஜய் பிறந்தநாள் - வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை விஜய்க்கு தெரிவித்துள்ளனர்.
விஜய் பிறந்தநாள் - வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்
Published on

சென்னை,

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதன்படி, கமல் ஹாசன், பிரபு தேவா, ஹரிஷ் கல்யாண், அர்ஜுன் தாஸ், அனிருத் , கார்த்திக் சுப்பராஜ், பா.ரஞ்சித், தமன், சிபிராஜ் உள்பட பலர் வாழ்த்து கூறியுள்ளனர்.

இதில், கமல் ஹாசன், 'அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com