நடிகர் விஜயின் தளபதி 67 புதிய அப்டேட்

தளபதி 67 படப்பிடிப்பில் பணிபுரிபவர்களின் ஐடி கார்டு தற்போது சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது.
நடிகர் விஜயின் தளபதி 67 புதிய அப்டேட்
Published on

சென்னை

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. மேலும் வெளியான 5 நாட்களில் உலகளவில் 150 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

வாரிசு படம் ரிலீஸானதுமே தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கை துவங்கிவிட்டார்கள். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்குமாம்.

தளபதி 67 படத்தில் திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தான் தளபதி 67 படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிப்பது தெரிய வந்திருக்கிறது.பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜனனிக்கு விஜய் படத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இன்டஸ்ரியில் இருப்பவர்கள் தங்களின் கேரியர் பிக்கப் ஆகும் என்கிற ஆசையில் தான் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார்கள். சும்மா வந்தாலும் கூட படங்கள், டிவி தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு அவர்களை தேடி வருகிறது. அப்படித் தான் ஜனனிக்கும் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் எடுத்த எடுப்பிலேயே தளபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜனனி பாப்பா கொடுத்து வைத்தவர் தான் என்கிறார்கள் ஆதரவாளர்கள்.

என்ன ஜனனி, தளபதியுடன் சேர்ந்து நடிக்கிறீர்களாமே என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதை நான் சொல்வதை விட தளபதி 67 படக்குழு சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். காத்திருங்கள் என்றார். அப்படி என்றால் தளபதி 67 படத்தில் ஜனனியை நிச்சயம் பார்க்கலாம்.

தளபதி 67 திரைப்படத்தில், 777 சார்லி படத்தில் கதாநாயகனாக நடித்துப் பிரபலமான ரக்ஷித் ஷெட்டியும் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து ரக்ஷித் ஷெட்டியை, படக்குழு அணுகியதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ரக்ஷித் ஷெட்டி, தளபதி 67 படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் பணிபுரிபவர்களின் ID கார்டு தற்போது சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com