அஜித் பட இயக்குனருடன் இணையும் விஜய்?

கோட் படப்பிடிப்புக்கு பின்னர்தான் தளபதி 69 இயக்குனர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
அஜித் பட இயக்குனருடன் இணையும் விஜய்?
Published on

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா,மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசைஅமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

அவர் அடுத்து நடிக்கும் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் அவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சி தீவிரமாக களம் இறங்கப் போகிறது. இதற்கிடையே அவர் கடைசியாக நடிக்கும் படத்தை 'ஆர்ஆர்ஆர்' படத் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கிறார்.

விஜய்யின் கடைசி படமென்பதால், இதை யார் இயக்குவார் என்கிற கேள்விக்கு தற்போது புதிய விடை கிடைத்துள்ளது. தகவலின்படி, விஜய்யின் கடைசி படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் கோட் படப்பிடிப்புக்குப் பின்னர்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வினோத் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை இயக்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் - வினோத் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com