'தளபதி 69' இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

‘தளபதி 69’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
'தளபதி 69' இரண்டாம் கட்ட படப்பிடிப்பு
Published on

சென்னை,

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். 'அனிமல்' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. அதன்படி, பிரம்மாண்ட பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த மாத தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஒரு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இன்று 'தளபதி 69' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.. அடுத்தது இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com