'விஜய் ஒரு ஆல்-ரவுண்டர்'- சிம்ரன் பாராட்டு


Thalapathy Vijay is a perfectionist, Vijay will definitely do the best in politics- Simran
x

நடிகை சிம்ரன், விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பேசினார்.

சென்னை,

தளபதி விஜய்யுடன் பல வெற்றிப் படங்களில் நடித்த பிரபல நடிகை சிம்ரன், சமீபத்தில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பேசினார்.

சமீபத்திய பேட்டியில் சிம்ரன் கூறுகையில், 'விஜய் ஒரு நல்ல நடிகர், டான்சர். சண்டை காட்சிகளில் எல்லாம் அவ்வளவு அற்புதாக நடிப்பார். அவர் ஒரு ஆல்-ரவுண்டர். அரசியலிலும் அவர் நிச்சயமாக சிறப்பாக செயல்படுவார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்' என்றார்.

விஜய் அரசியல் களத்தில் நுழையத் தயாராகி வரும் நிலையில், சிம்ரனின் இந்த கருத்துக்கள் ரசிகர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

சிம்ரன் சமீபத்தில் சசிகுமாருடன் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மறுபுறம், விஜய் தற்போது 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

1 More update

Next Story