ஷங்கர் மகள் திருமணத்துக்கு தனியாக வந்த சங்கீதா

நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவைப் பிரிந்து விட்டார் என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் சங்கீதா- விஜய் இருவரின் தொடர் செயல்பாடுகள் அமைந்திருப்பதும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷங்கர் மகள் திருமணத்துக்கு தனியாக வந்த சங்கீதா
Published on

ரசிகையாக இருந்து நடிகர் விஜயின் மனைவியானவர் சங்கீதா. இருவரின் திருமண வாழ்க்கையும் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்த நிலையில், 'இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள், விவாகரத்துப் பெறப் பேகிறார்கள்' என்றெல்லாம் செய்திகள் வெளியானது. அதற்கேற்றார் போலவே இருவரின் செயல்பாடுகளும் இருந்தன.

முன்பெல்லாம் விஜயின் பட நிகழ்ச்சிகளில் சங்கீதா தவறாமல் கலந்து கொள்வார். ஆனால், இந்த விவாகரத்து செய்தி கிளம்பிய உடன் விஜய் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார் சங்கீதா. 'லியோ' பட இசை வெளியீட்டு விழாவிலும் அவரைப் பார்க்க முடியவில்லை. விஜயின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா மட்டுமே கலந்து கொண்டனர்.

அதேபோல, மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்திற்கும் விஜய் வாழ்த்துச் சொல்லி அறிவிப்பு ஒன்றும் வெளியிடவில்லை. விஜயை இன்னொரு நடிகையுடன் தொடர்புபடுத்தி வந்த கிசுகிசுவும் குடும்பத்தில் புகைச்சலை ஏற்படுத்தியது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதேபோல, விஜயின் அரசியல் என்ட்ரியிலும் சங்கீதா பெரிதாக ஆர்வம் காட்டவில்லையாம். 

இதையெல்லாம் பொருட்படுத்தாது விஜய் இருப்பதால் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சங்கீதா இப்போது லண்டனில் பெற்றோருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் ஷங்கர் மகள் திருமணத்திற்கும் அவர் தனியாகதான் வந்திருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்தவர்கள் விஜய் படப்பிடிப்பில் இருப்பதாலேயே சங்கீதாவை அனுப்பி இருக்கிறார் என்றும் இருவரும் பிரியவில்லை என்றும் ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com