'தளபதி 68' அப்டேட்ஸ் விரைவில் வரும்...இயக்குநர் வெங்கட்பிரபு தகவல்..!

இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
'தளபதி 68' அப்டேட்ஸ் விரைவில் வரும்...இயக்குநர் வெங்கட்பிரபு தகவல்..!
Published on

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பாங்காக் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், படத்தின் தலைப்பு குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், அன்பை பரப்புங்கள். தளபதி 68 அப்டேட்ஸ் விரைவில் வரும். பண்டிகை காலத்தை அனுபவிக்கவும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com