’அகண்டா 5க்கு கூட பாலையா ரெடி’ - தமன்

'அகண்டா 2' படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.
Thaman: Balayya is ready even for Akhanda 5
Published on

மும்பை,

கடந்த சில ஆண்டுகளாக பாலகிருஷ்ணாவின்(பாலையா) படங்களுக்கு தமன் இசையமைத்து வருகிறார். தற்போது அகண்டா 2 படத்திற்கும் அவர் இசையமைத்திருக்கிறார். அகண்டா 2 படத்தின் தாண்டவம் பாடல் வெளியீட்டு நிகழ்வு நேற்று மும்பையில் நடைபெற்றது.

அந்த விழாவிற்குப் பிறகு நடைபெற்ற ஊடக நிகழ்வில் பேசிய தமன், பாலகிருஷ்ணா மீதான தனது அன்பை இசை மூலம் வெளிப்படுத்துவதாகக் கூறினார்.

அவர் பேசுகையில், "சினிமாவைத் தவிர, பாலையா தொண்டு பணிகளையும் செய்து வருகிறார். தன்னை நேசிக்கும் மக்களுக்கு விசுவாசமாக இருக்கிறார். அவருடன் தொடர்ந்து பணியாற்றுவது எனக்கு அதிர்ஷ்டம். அவர் அகண்டா 5 இல் நடிக்க கூட தயாராக இருப்பார் என்றார். 'அகண்டா 2' படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com