கதாநாயகர்களை விட “நடிகைகளுக்கே கஷ்டம் அதிகம்”-சமந்தா

முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடருக்கு வருகிறார்கள். சமந்தாவும் வெப் தொடரில் நடிக்கிறார். வெப் தொடர்கள் தயாரிக்கவும் தயாராகிறார்.
கதாநாயகர்களை விட “நடிகைகளுக்கே கஷ்டம் அதிகம்”-சமந்தா
Published on

சமந்தா வெப் தொடரில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

வெப் தொடர்களுக்கு வரவேற்பு உள்ளது. சினிமாவில் மட்டுமன்றி எல்லா துறைகளிலும் ஆண், பெண் வித்தியாசம் ஒழிய வேண்டும். திறமை யாருடையை சொத்தும் இல்லை. அது எல்லோரிடமும் இருக்கிறது. சினிமா தொழிலில் நடிப்பு, தொழில் நுட்பம், தயாரிப்பு எதிலும் பெண்கள், ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை. பெண்களுக்குத்தான் அதிக கஷ்டமும் இருக்கிறது.

கதாநாயகனை விட கதாநாயகிகள்தான் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். பெண் இயக்குனர், ஆண் இயக்குனர் என்ற வித்தியாசம் போக வேண்டும். எனது ஓ பேபி படத்துக்கு இயக்குனரோடு சேர்ந்து 8 பெண்கள் வேலை செய்தோம். ஆண்களுக்கு இணையாக உழைத்தனர். ஒரு நாள் கூட படப்பிடிப்பில் தாமதம் ஏற்படவில்லை.

திருமணம் ஆனதில் இருந்து குழந்தை எப்போது என்று என்னை சந்திக்கிறவர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். இதில் தவறு இல்லை. குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை எனக்கு இருக்கிறது. அந்த காலத்து பெண்களுக்கு இந்த சுதந்திரம் இல்லை.

ஆனால் இன்றைய தலைமுறையினர் பிடித்ததை செய்கிறார்கள். எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது பெற்றுக்கொள்வேன். இவ்வாறு சமந்தா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com