“தண்டகாரண்யம்” : அட்டகத்தி தினேஷின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் நடித்துள்ள ‘தண்டகாரண்யம்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 19ம் தேதி வெளியாகிறது.
“தண்டகாரண்யம்” : அட்டகத்தி தினேஷின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
Published on

சென்னை,

கடந்த 2019-ம் ஆண்டு அதியன் ஆதிரை இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவான படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஆதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது படம் 'தண்டகாரண்யம்'. இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

'அட்டகத்தி' தினேஷ், கலையரசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். உமாதேவி, அறிவு, தனிகொடி, ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

யு/ஏ தணிக்கை சான்றிதழ் பெற்றியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், தண்டகாரண்யம் திரைப்படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் தினேஷ் "சடையன்" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com