“தண்டகாரண்யம்” படத்தின் “அடியே அலங்காரி” வீடியோ பாடல் வெளியானது

‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் நடித்த்த ‘தண்டகாரண்யம்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Published on

கடந்த 2019-ம் ஆண்டு அதியன் ஆதிரை இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவான படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஆதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது படம் தண்டகாரண்யம். இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அட்டகத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். உமாதேவி, அறிவு, தனிகொடி, ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். யு/ஏ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது.

தண்டகாரண்யம் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகளவில் ரூ. 1 கோடியே 20 லட்சம் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், தண்டகாரண்யம் படத்தின் அடியே அலங்காரி வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com