பா.ரஞ்சித்தின் “தண்டகாரண்யம்” டீசர் வெளியீடு


தினத்தந்தி 25 Aug 2025 7:37 PM IST (Updated: 2 Sept 2025 10:23 PM IST)
t-max-icont-min-icon

‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் நடித்துள்ள ‘தண்டகாரண்யம்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 19ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

கடந்த 2019-ம் ஆண்டு அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் உருவான படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஆதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது படம் 'தண்டகாரண்யம்'. இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

'அட்டகத்தி' தினேஷ், கலையரசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். உமாதேவி, அறிவு, தனிகொடி, ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. நடிகர் அட்டகத்தி தினேஷ் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டார்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'அடியே அலங்காரி' என்ற பாடல் வெளியானது. இந்த படத்திற்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது.

இந்நிலையில் ‘தண்டகாரண்யம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 19ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story