திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 'தண்டேல்' படக்குழு சாமி தரிசனம்

சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் படம் 6 நாட்களில் ரூ.86 கோடி வசூல் செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 'தண்டேல்' படக்குழு சாமி தரிசனம்
Published on

திருப்பதி,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் கடந்த 7-ந் தேதி வெளியான படம் 'தண்டேல்'. 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.

கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் மற்றும் அல்லு அரவிந்த் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 2019-ம் ஆண்டு ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் 6 நாட்களில் உலக அளவில் ரூ. 86 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருவதைத் தொடர்ந்து தண்டேல் படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது சாய்பல்லவி மற்றும் நாக சைதன்யாவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com