தங்க கிளியே - லேபில் வெப் தொடரின் பாடல் வெளியானது..!

'லேபில்' வெப்தொடர் வருகிற 10-ம்தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.
தங்க கிளியே - லேபில் வெப் தொடரின் பாடல் வெளியானது..!
Published on

சென்னை,

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இந்த தொடரில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'லேபில்' வெப் தொடரின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'லேபில்' வெப்தொடர் வருகிற 10-ம்தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த தொடரில் இடம்பெற்றுள்ள 'தங்க கிளியே' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com